Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

புனிதர் பாடல்கள்

தூய அந்தோனியார் தேரில் வலம் வருவார்  

தேரில் வலம் வருவார் - அந்தோனி
தரிசனம் தந்திடுவார்
கோடி நலம் பொழிவார் - எங்கள்
குறையெல்லாம் தீர்த்திடுவார் (தேரில்)

அமலன் யேசுவுக்காய் - உடல்
பொருள் ஆவிதனை அளித்தீர் - 2
ஐயா சரணடைந்தோம் - எம்மை
மெய்யாய் காத்திடுவீர் (தேரில்)

பஞ்சம் பிணி அகல - புனிதா
புதுமலர் நாடி வந்தோம் - 2
அண்டி வருந்தி நின்றோம் - வாட்டும்
நோய் பல தீர்த்திடுவாய் (தேரில்)

ஆண்டுகள் ஆண்டுகளாய் - தமிழர்
அடிமையாய் வாழ்கின்றோம்
ஆறுதல் தந்தருள்வாய் - எங்கள்
அடிமை விலங்கறுப்பாய் (தேரில்)


 

மரியன்னையே எங்கள் மாமரியே
மாபரன் இயேசுவின் தாய்மரியே!