Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

புனிதர் பாடல்கள்

தூய அந்தோனியார் புதுமைகள் புரிந்திடும் அந்தோனியாரை  

புதுமைகள் புரிந்திடும் அந்தோனியாரை
பாடுங்கள் புகழ் பாடுங்கள்
மகிமையில் செழித்திடும் அந்தோனியாரை
போற்றுங்கள் இங்கு போற்றுங்கள் - ஆகா
கோவிலில் அற்புதம் செய்கின்ற  - (
அந்தோனியாரே அந்தோனியாரே)
கோவிலில் அற்புதம் செய்கின்ற - நம்
உத்தம புனிதரைப் பாடுங்கள் - அவர்
வல்லவ செயல்களைப் பாடுங்கள்

அன்னை மரியை முகமுகமாய்
தரிசித்து அன்பை பொழிபவரே
அழியா நாக்கு உடையவரே
ஆபத்தில் எம்மைக் காப்பாயே
குழந்தை இயேசுவைக் கரமேந்தி  (
அந்தோனியாரே அந்தோனியாரே)
குழந்தை செல்வத்தை தருபவரே - எங்கள்
குறைகளை நாளும் தீர்ப்பவரே

நாளெல்லாம் மக்கள் தாராளமாய்
நாடி வருவது நலம் பெறவே
காணாமல் போன பொருளெல்லாம்
காண்பித்துக் கொடுத்தது புதுமைதானே
பேய்களின் கூட்டம் நடுநடுங்க  (
அந்தோனியாரே அந்தோனியாரே)
மண்ணில புதுமைகள் செய்பவரே - மக்கள்
மனதில் என்றும் வாழ்பவரே


 

மரியன்னையே எங்கள் மாமரியே
மாபரன் இயேசுவின் தாய்மரியே!