தூய அந்தோனியார் | புனிதரே... மறை வல்லுனர் |
புனிதரே........ பதுவைப் புனிதரே கோடி அற்புதர் அந்தோனியாரே புனிதரே........ மறை வல்லுனர் அந்தோனியாரே புனிதரே........ மறை போதகர் அந்தோனியாரே பதுவைப் புனிதர் என அழைக்கப்பட்ட கோடி அற்புதர் அந்தோனியாரே வாழ்கவே வாழ்கவே உம் புகழ் வாழ்கவே (2) புனித வாழ்க்கை வாழ்ந்து கூரிய நுண் அறிவு பெற்றவரே இறை வார்த்தையை ஆர்வத்துடன் கற்று அறிந்தவரே பதுவைப் புனிதர் என அழைக்கப்பட்ட கோடி அற்புதர் அந்தோனியாரே வாழ்கவே வாழ்கவே உம் புகழ் வாழ்கவே (2) றீமினி என்னும் கடற்கரை நகரில் போதித்ததில் மக்கள் மறுத்தபோதும் மீன்களும் வார்தையை கேட்டனவே பதுவைப் புனிதர் என அழைக்கப்பட்ட கோடி அற்புதர் அந்தோனியாரே வாழ்கவே வாழ்கவே உம் புகழ் வாழ்கவே (2) நற்கருணையிலே இயேசு இருப்பதை ஒருவர் மறுத்தபோதும் கழுதை உன் கட்டளைக்கு கீழ்ப்படிந்து அதை ஆராதித்ததே பதுவைப் புனிதர் என அழைக்கப்பட்ட கோடி அற்புதர் அந்தோனியாரே வாழ்கவே வாழ்கவே உம் புகழ் வாழ்கவே (2) மறையுரை ஆற்றி கடும் தவம் செய்து வாழ்ந்தவரே நீர் இருந்தபோதும் உம் நாக்கு அழியாவரம் பெற்றவரே பதுவைப் புனிதர் என அழைக்கப்பட்ட கோடி அற்புதர் அந்தோனியாரே வாழ்கவே வாழ்கவே உம் புகழ் வாழ்கவே (2) |