தூய அந்தோனியார் | பாதுவாப் பதுவின் அந்தோனியாரே |
பாதுவாப் பதுவின் அந்தோனியாரே பாவிகள் எம்மைக் காத்தருள்வாயே - (2) எள்லா வரமும் மேக பிதாவால் நல்லாதரவாய் நிறைந்து நின்றீரே பொல்லா நோயால் பேயால் நாங்கள் வல்லோன் உமையே தேடிவந்தோமே தளராமல் நாம் தரணியில் வாழ தந்தையே நின் அருள் தந்திடுவாய் தன்னிகரில்லா இயேசுவின் உருவை தாங்கியே என்றும் வந்திடுவாய் கடல் வாழ் மீன்களும உம் உரை கேட்க கனிவாய் கரையில் காத்து நின்றனரே காலங்கள் கடந்த கடவுளையே நின் கரங்களில் தாங்கிடும் பேறுபெற்றவரே தளராமல் நாம் தரணியில் வாழ தந்தையே நின் அருள் தந்திடுவாய் தன்னிகரில்லா இயேசுவின் உருவை தாங்கியே என்றும் வந்திடுவாய் |