Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

புனிதர் பாடல்கள்

தூய அந்தோனியார் பதுவை நகரில் பிறந்த  

பதுவை நகரில் பிறந்த எங்கள் அந்தோனியாரே
புதுமை பலவும் புரிந்த எங்கள் அந்தோனியாரே
இறைவனை உம் வசமாக்கினீர்
துன்பத்தை இன்பமாய் மாற்றினீர்
புனிதராக மண்ணில் இங்கு பேரெடுத்தீர்
இங்கு பேரெடுத்தீர்

செல்வமகனாகப் பிறந்து
பெரும் செல்வச் செழிப்பெல்லாம்
கடவுள் அருளினை வேண்டி
பல காலம் அவர் பணி தொடர்ந்து
சிற்றின்பத்தை நீர் வெறுத்தீர்
இறைபணியில் நீர் நடந்து
புனிதராக மணணில் இங்கு பேரெடுத்தீர்
இங்கு பேரெடுத்தீர்

இறைவன் வார்த்தையை மக்கள்
பலர் அறியச் செய்தீரே அன்று
திருந்தா மனங்களைத் திருத்தி
தெய்வ நெறியில் அவர்களைச் சேர்த்து
தாழ்ச்சியுடன் நீர் நடந்து
தருமத்தையே பின்தொடர்ந்து
புனிதராக மணணில் இங்கு பேரெடுத்தீர்
இங்கு பேரெடுத்தீர்

 

மரியன்னையே எங்கள் மாமரியே
மாபரன் இயேசுவின் தாய்மரியே!