தூய அந்தோனியார் | பார்போற்றும் புனிதரே |
பார்போற்றும் புனிதரே அந்தோனியாரே பதுவையிலே வீற்றிருக்கும் அந்தோனியாரே கோடி அற்புதம் புரிந்தவரே குறைகளைத் தீர்க்கும் வல்லவரே ஆண்டவர் வார்த்தையை அறிவித்ததால் அழியா நாவினைக் கொண்டவரே குழந்தை இயேசுவை ஏந்தினீரே வருவோர் நலம் பெறச் செய்தவரே அதிசயமே... வல்லமையே.... ஆறுதலே.... பேரன்பே.... தேடுங்கள் கிடைக்கும் என்றவரே தேடியே அடைந்த தூயவரே தேடும் பொருட்களைக் கிடைக்கச் செய்து தேவனைத் தேற்றிடும் போதகரே அதிசயமே... வல்லமையே.... ஆறுதலே.... பேரன்பே.... |