Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

புனிதர் பாடல்கள்

தூய அந்தோனியார் நீரே எம் வாழ்வில்  

நீரே எம் வாழ்வில் வந்த ஆருயிரே
புனித அந்தோனியே
நீரே எம் நெஞ்சில் வாழும் ஓர் உறவே
புனித அந்தோனியே
உன் நாமம் பாடியே மகிழ்வேன்
உன் அன்பைப் போற்றியே புகழ்ந்தேன்
எந்நாளும் துணையென உனைத்தான் ஸ்துதிப்பேன்

குழந்தை இயேசுவைக் கரமதில் சுமந்த
புனிதர் நீயல்லவா
புதுமை வரங்கள் புரிந்திடும்
பேறு பெற்றவர் நீயல்லவா
நோய்கள் என்னில் தீர்த்திட வா
..........என்னில் நிலைத்திட வா
தாயாய்  என்னை நடத்திட வா
சேயாய் காக்க அருகினில் வா

எம் வாழ்வில் துன்பங்கள் வருகின்றபொழுது
நீ எந்தன் அருகிருப்பாய்
உம் பாதை வழிதனில் நடக்கின்ற பொழுது
நீ எந்தன் கரம் பிடிப்பாய்
உயிராய் என்னில் எழுந்திட வா
உண்மை நெறியில் நடத்திட வா
மாற்றம் நெஞ்சில் மலர்ந்திட வா
ஏற்றம் வாழ்வில் நிறைத்திட வா
நம்பியே வந்தேன் நலமே தந்திடுவாய்


 

மரியன்னையே எங்கள் மாமரியே
மாபரன் இயேசுவின் தாய்மரியே!