Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

புனிதர் பாடல்கள்

   
தூய அந்தோனியார் மன்றாட்டு மாலை

எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் (4)
பதுவைப் பதியரே! எங்கள் புனிதரே! தூய அந்தோனியாரே!
விண்ணகத் திருவின் திருப்பெட்டியான தூய அந்தோனியாரே!
திருச்சபையுடைய தெளிந்த தீபமாம் தூய அந்தோனியாரே!
தவத்தின்போதும் தாழ்ச்சி நிறைந்த தூய அந்தோனியாரே!
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் (4)

தர்மத்தை மிகவும் நேசித்துத் தொடர்ந்த தூய அந்தோனியாரே!
சிலுவைதனையே மிகஅன்பு செய்த தூய அந்தோனியாரே!
தர்மநெறியிலே மாறா மனதுடைய தூய அந்தோனியாரே!
சிற்றின்ப ஆசையை வென்று ஜெயித்த தூய அந்தோனியாரே!
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் (4)

நிஸச ரிரிரி நிஸச மபப   நிஸச ரிரிரி நிஸச ப

தூய்மையில் என்றும் லீலிமலரான தூய அந்தோனியாரே!
இஸ்பானிய நாட்டின் நவநடசத்திரமான தூய அந்தோனியாரே!
நற்செய்திதனையே ஆர்வமாய் போதித்த தூய அந்தோனியாரே!
இறைவாக்கதனின் தொனிச்சத்தமான தூய அந்தோனியாரே!
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் (4)


தூய ஆவியாரின் படிப்பினையை விரும்பிய தூய அந்தோனியாரே!
அவிவிசுவாசியை திருந்திடப் போதித்த தூய அந்தோனியாரே!
தீய சக்தியை நடுங்கிடச் செய்திடும் தூய அந்தோனியாரே!
புண்ணியவான்களின் குறையற்ற படிப்பினையே தூய அந்தோனியாரே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் (4)


மீனோரென்கிற துறவியின் படிப்பினையே தூய அந்தோனியாரே!
திருத்தூதர்களின் கொழுந்தாய் இருந்திடும் தூய அந்தோனியாரே!
பாவம் புரிவோர்க்கு வெளிச்சம் கொடுக்கிற தூய அந்தோனியாரே!
வழிகள் தவறியே செல்வோரின் துணையான தூய அந்தோனியாரே!
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் (4)

அற்புதம் அனுதினம் புவிதனில் புரிந்திடும் தூய அந்தோனியாரே!
சலிப்புள்ள மனிதர்க்கு ஆறுதல் சொல்கின்ற தூய அந்தோனியாரே!
குற்றம் இல்லாத மக்களின் ஆறுதல் தூய அந்தோனியாரே!
உண்மையைப் போதிக்கும் போதகரான தூய அந்தோனியாரே!
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் (4)


பேய்களை விரட்டியே தூரவே ஓட்டிடும் தூய அந்தோனியாரே!
அடிமைப்பட்டுள்ள மக்களை மீட்டிடும் தூய அந்தோனியாரே!
நோயில் வாடுவோர் குணம்பெறச் செய்திடும் தூய அந்தோனியாரே!
இறைவனின் உதவியால் இறந்தோரை உயிர்ப்பித்த தூய அந்தோனியாரே!
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் (4)

நிஸச ரிரிரி நிஸச மபப நிஸச ரிரிரி நிஸச ப

பிறவிக் குருடர்க்கு பார்வை கொடுத்த நல் தூய அந்தோனியாரே!
காணாமல் போனதைக் காட்டியே கொடுத்திடும் தூய அந்தோனியாரே!
இழந்த பொருட்களை கண்டடையச் செய்திடும் தூய அந்தோனியாரே!
வழக்கில் உழல்வோரின் உண்மையைக் காத்திடும் தூய அந்தோனியாரே!
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் (4)

விண்ணகம் சென்ற பின் வழிதனைக் காட்டிடும் தூய அந்தோனியாரே!
ஏழை எளியோரின் இரத்தினமாகிய தூய அந்தோனியாரே!
ஆழ்கடல் மீன்களுக்கு போதனை செய்திட்ட தூய அந்தோனியாரே!
இறைவனின் தூதரின் தூய்மையை நேசித்த தூய அந்தோனியாரே!
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் (4)


நஞசான உணவையே வேண்டியே அருந்திய தூய அந்தோனியாரே!
பல்வேறு நாட்டிலே புண்ணியம் விளைவித்த தூய அந்தோனியாரே!
உலகஅபத்தத்தை புறமே ஒதுக்கிய தூய அந்தோனியாரே!
ஆழ்கடல்தனிலே தவிப்போரைக் காக்கும் தூய அந்தோனியாரே!
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் (4)


உம்மிடம் வேண்டுவோர்க்கு அன்பரைய் இருந்திடும் தூய அந்தோனியாரே!
தேவனைப் புகழ்வோர்க்கு மன்றாட்டுச் செய்திடும் தூய அந்தோனியாரே!
ஐம்புலன் வென்றோர்கள் சபைக்கு அரணான தூய அந்தோனியாரே!
குழந்தை இயேசுவைக் கரமதில் ஏந்திய தூய அந்தோனியாரே!
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் (4)








 

மரியன்னையே எங்கள் மாமரியே
மாபரன் இயேசுவின் தாய்மரியே!