தூய அந்தோனியார் | -லிஸ்பன் நகரத்தின் |
லிஸ்பன் நகரத்தின் லீலி மலரோனே கற்பின் புனிதரே வாழியவே - உயர் அற்புதங்கள் கோடி புரிந்திடும் வள்ளலே அருட்பெருஞ் சோதியே ஆரமுதே - (அன்பின்) அருட்பெருஞ் சோதியே ஆரமதே பொற்பீடந் தன்னிலோர் ஆண்டினுட் பூசிக்கப் பதுவையின் செல்வமே நீர் சிறந்தீர் - ஞானப் பதுவையின் செல்வமே நீர் சிறந்தீர் அந்தரத்தே வேலை செய்து நின்ற தச்சன் ஐயகோ என்று கீழ் வீழ்கையிலே - ( தச்சன்) ஐயகோ என்று கீழ் வீழ்கையிலே விந்தையாய் வானிடை நின்றிடச் செய்தனை வார்த்தையுண்டோ புகழ் பாடிடவே - (வேறு) வார்த்தையுண்டோ புகழ் பாடிடவே ஆறாப்பசியாய் இருந்த கழுதை முன் நாலாறுணவுகள் காத்திருக்க - (அங்கே) நாலாறுணவுகள் காத்திருக்க மாறாத பக்தியாய் தேவநற்கருணையைத் தானாகவே தொழச் செய்தவரே - (அன்று) தானாகவே தொழச் செய்தவரே கடிய மனங்கொண்ட கொடிய துலுக்கர்கள் மடியவைக்க நஞ்சை உண்ண விட்டார் - (உம்மை) மடியவைக்க நஞ்சை உண்ண விட்டார் முடியாதவர் செயல் முதல்வா நின் அருட்செயல் அடியனைக் காரென்று நஞ்சை வென்றீர் - (தேவா) அடியனைக் காரென்று நஞ்சை வென்றீர் தந்தை மடுத்தீனு தாயார் திரேசியாள் தந்த பெயர் பறுனாந்துவன்றோ - (பெற்றோர்) தந்த பெயர் பறுனாந்துவன்றோ எந்தையே இந்தப் பெயரினை மாற்றியே தந்தனை சந்த அந்தோனியென்றே - (நீவிர்) தந்தனை சந்த அந்தோனியென்றே மானிடர் கேட்க மறுத்த உபதேசம் மீனினங் கேட்க உரைத்தவரே - (கடல்) மீனினங் கேட்க உரைத்தவரே ஆனி பதின்மூன்றில் ஆன்ம சாந்திபெற்று அடியரை ஆசீர்வதிப்பவரே - (வேண்டும்) அடியரை ஆசீர்வதிப்பவரே |