Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

புனிதர் பாடல்கள்

தூய அந்தோனியார் -கோடியற்புதரெங்கள் காவலரே  
கோடியற்புதரெங்கள் காவலரே
கொண்டாடுவோம் கொண்டாடுவோம்

அந்தோனி எனும் நாமம் அடியோர்க்கு தஞ்சம்
வந்தாளும் வரந்தாரும்
பந்த பாசவினை வெந்துமாயுமெனக்
கொண்டாடுவோம் கொண்டாடுவோம் - கோடி

அருள் சிந்தும் முகம் காண ஒடோடி வந்தோம்
ஆதாரம் தரவேண்டும்
அண்ணலே புதுமை வள்ளலே மகிழ்ந்து
கொண்டாடுவோம் கொண்டாடுவோம் - கோடி

அணையாத பெரும் தீபம் அருள் வாழ்வின் ஐpவன்
துணையாகத் துயர் நீங்கும்
இணையில்லாத புகழ் உலகெல்லாம் பரவக்
கொண்டாடுவோம் கொண்டாடுவோம் - கோடி

அழகோடு விளையாடும் ரதம் காண வேண்டும்
ரதமேறி வலம் வந்து பக்தகோடிகளுக்காசி நல்கவெனக்
கொண்டாடுவோம் கொண்டாடுவோம் - கோடி


 

மரியன்னையே எங்கள் மாமரியே
மாபரன் இயேசுவின் தாய்மரியே!