தூய அந்தோனியார் | எண்ணில்லா அற்புதம் |
எண்ணில்லா அற்புதம் செய்த பதுவையாரே விண்ணிலே வீற்றிருக்கும் எங்கள் அந்தோனியாரே புண்ணிய வாழ்வில் புதுமைகள் செய்பவரே (2) மண்ணிலே எம் வாழ்வை உயர்த்துமையா (2) அற்புதர் வாழ்க வாழ்க எங்கள் அந்தோனியார் வாழ்க வாழ்க பொருள் பல கொண்டு பிறந்திட்டாலும் எளிமையாய் வாழ்ந்தவரே அருள் பல பெற்று வாழ்ந்திடவே அற்புதர் பாதம் நாடி வந்தோம் பொற்பல உலகில் இருந்திட்டாலும் உண்மையைய் உதிர்ந்தவரே பற்பல துன்பங்கள் விலகிடவே உந்தனின் உண்மையைத் தேடி வந்தோம் அற்புதர் வாழ்க வாழ்க எங்கள் அந்தோனியார் வாழ்க வாழ்க திருப்புகழ் விளங்கும் இத் திருத்தலத்தில் தினம் தினம் விழாக்கோலம் ஒருமுறை உனதெழில் முகம் பார்த்தால் எங்கள் வாழ்வினில் அருள் பெருகும் வாரியே வருகின்ற பக்தர்களை அணைக்கும் உன் திருக்கோலம் பாடியே எங்கணும் பரவிடுவோம் அன்பனே உந்தனின் புகழோரம் அற்புதர் வாழ்க வாழ்க எங்கள் அந்தோனியார் வாழ்க வாழ்க |