Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

புனிதர் பாடல்கள்

தூய அந்தோனியார் அற்புதரே புனிதரே  



                 தொகையறா

போர்ச்சுக்கல் நாட்டில் லிஸ்பன் நகரில்
தேவ அன்னை விண்ணகம் சென்ற
திருநாளன்று பிறந்த
வரம்தரும் கோடி பக்தர்களின் அற்புதரே
பதுவை புனித அந்தோனியாரே
உம் திருக்கொடி வானில் எழும்புதய்யா
எம் எண்ணங்கள் மேலே உயருதய்யா

              பல்லவி

அற்புதரே புனிதரே அந்தோனியாரே -2
அதிசயத்தால் மக்களை கவர்ந்தவரே - 2
இறைவார்த்தை இனிமையாய் உரைத்தவரே
இறையன்பால் எல்லோரையும் ஈர்த்தவரே
உம் திருக்கொடி வானில் எருதய்யா
உள்ளங்கள் மேலே எழும்புதய்யா
அற்புதரே புனிதரே அந்தோணியாரே

இயேசுவின் இதயத்தை பார்த்தவரே
ஒளிவடிவில் அன்னையை கண்டவரே
நற்கருணை மகிமையை எடுத்துரைத்தீரே
குழந்தை இயேசுவோடு வாழ்ந்து வந்தாயே
உம் திருக்கொடி வானில் பறக்குதய்யா
உம் புகழும் நாளும் பெருகுதய்யா
அற்புதரே புனிதரே அந்தோனியாரே

சிலுவையால் தீயவனை வென்றவரே
தீராத நோய்களை தீர்த்தவரே
இறைவார்த்தை இனிமையாய் எடுத்துரைத்தீரே
இறவா புகழை என்றும் பெற்றாயே
உம் திருக்கொடி வானில் பறக்குதய்யா
உம் புகழும் நாளும் பெருகுதய்யா
அற்புதரே புனிதரே அந்தோனியாரே

புனிதரே புகழ்பாடும் திருக்கொடியே
வானத்தின் மீதேறி வண்ணமாய் ஜொலிக்கின்றாய்
வணங்குகின்றோம் புனித அந்தோனியாரே



 

மரியன்னையே எங்கள் மாமரியே
மாபரன் இயேசுவின் தாய்மரியே!