தூய அந்தோனியார் | -அழகின் வார்ப்பினிலே |
அழகின் வார்ப்பினிலே அழியாக் கோலமையா உலகின் மீட்பினிலே - அந்தோனி உதய ராகமையா - 2 ஞானக்குழந்தை ஞானி கரத்தில் தியான நோக்கு வழங்கும் வரத்தில் - 2 தான தர்மம் ஏழு ஸ்வரத்தில் உதய ராகமையா - 2 முன்னை வினையோ மூண்ட பழியோ அன்னை தந்தை விதைத்த விதையோ - 2 கண்கள் இழந்தோம் காட்சியேது கடைக்கண் பாருமையா - 2 கல்வி செல்வம் கலங்குதிங்கே தர்மம் நீதி விலங்கு இங்கே - 2 பொல்லாத கொடுங்கோல் கொலுவிலங்கே பாதுகாருமையா - 2 பதுவைப் பதியின் பாசையூர்ப் பதியே கதியென்றிருக்கும் குடும்பமனைத்தும் - 2 புதமைப்புனிதா புதிய வழியில் ஆசி பொழியுமையா - 2 |