தூய அந்தோனியார் | அலைகடல் அமிழ்தினை |
அலைகடல் அமிழ்தினை வழங்குதையா அப்பன் அந்தோனி அருட்பெயர் விளங்குதையா விளங்குதையா அந்தோனி நாமம் அன்பெனும் தீபம் வந்தனை செய்வோம் நாம் அச்சம் இல்லாதென்று மச்சக் குழாம் எல்லாம் இச்சை கொண்டே போதம் கேட்டு நிற்க தச்சனார் கோவிலின் கூரை பட்சமாய் கட்டிய வேளை தவறியே வீழ்கையில் உமையழைக்க விந்தையாய் அந்தரம் நின்றான் தந்தையே நின் அருள் கண்டான் மின்னலடை பொன்னொளியாய் கண்ணிமையாய் காப்பதனால் லிலலியெனும் நவநிதியே லிஸ்போவா நின் பதியே கல்வி தரும் கலைமதியே வாழியவே தொல்வினை போற்றும் நின் நிழல்தேடி எல்லாரும் உம்மையே நாடி நின்றோம் பாலனைத் தாங்கிய கைகள் எம்மையும் தாங்கிட வேண்டும் கால்களைக் கண்களில் ஒற்றி கழலடி கும்பிடவந்தோம் கற்பகமே கண்பாரும் கலங்கும் எம்மைக் கரைசேரும் |