Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

புனிதர் பாடல்கள்

தூய அந்தோனியார் 1157-விளதை வினோதரே  


விளதை வினோதரே புனித அந்தோனியாரே
வரம் பல அருளும் கோடி அற்புதரே -2
வாழ்க வாழ்க இறை அருள்மிகு போதகரே
வாழ்க வாழ்க எங்கள் வியத்தகு காவலரே


விண்ணக வாழ்வின் படிப்பினையே - மறை
உண்மையை உரைத்தவரே (2)
புண்ணியம் எனும் ஞான வெள்ளாண்மையை
எங்கும் விளைவித்த மாமுனியே (2)

திருச்சிலுவையை மிக நேசித்தவரே என்றும்
தூய்மையின் லீலி மலரே (2)
தவறுவோர் வாழ்வின் ஒளிவிளக்கே - பக்தர்
துயரினைத் துடைப்பவரே (2)


 

மரியன்னையே எங்கள் மாமரியே
மாபரன் இயேசுவின் தாய்மரியே!