புனித அந்தோனியார் | 1156-மங்களம் மங்களமே |
மங்களம் மங்களமே - சுப மங்களம் மங்களமே எங்கள் சந்தந்தோனியார்க்கு மங்களம் மங்களமே (2) லிஸ்பன் நகர் தனிலே கற்பின் லீலியெனப் பிறந்த சுத்தன் நாமம் சிந்தை கொண்டோம் சீர்பெற்றுயர்ந்திடவே மாமுனியே மணியே மாசில் மாணிக்கமே கனியே நாமுன் நேசம் நாளுந்தேடி நாண் மலராகிடவே பதுவைப் பதிவளனே யேசு பாலன் கைக்கொண்டவரே ஆசையோடே அண்டிவந்தோம் ஆட்கொள்வதுன் கடனே மாயா உலக சுகம் துஸ்ரப்பேயால் வளருபவம் ஓயாதோட்டி தூய மோட்ச சேயாயெழுந்தவர்க்கே காலங் காலங்களாய் நாம் பெற்ற நன்மைகட்காய் போற்றி நின்றோம் மேலும் மேலும் பாதுகாத்தாள் தந்தையே மங்களம் |