புனித அந்தோனியார் | 1155-புனித அந்தோனியையா |
புனித அந்தோனியையா எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் - 2 ஒன்றாயிணைந்து நாங்கள் என்றுமுன் புகழ் பாட அன்போடு அருள் வேண்டும் எமக்கு வேறென்ன வேண்டும் இரண்டு விழிகள் கண்டோம் இன்பத்தின் எல்லை நின்றோம் மருண்ட மயக்கம் போக்கும் மருந்தென நம்பி வந்தோம் மூவாசைப் பிணி நீக்கி முதல்வனைக் கரத்தேந்தி ஆதாரம் எமக்கருளும் அப்பா அற்புத நாதா நானா திசைகள் போற்றும் நாவழியா விரந்தன் நாளாயிரம் புதுமை நாடித்தரும் வரத்தன் |