புனித அந்தோனியார் | 1154-புதுமையின் நாயகனாம் |
புதுமையின் நாயகனாம் புனித அந்தோனி புகழ் பல பாடியே மகிழ்ந்திடுவோமே புனிதமாய் அவர் போல நாமும் வாழவே இறைவனடி தாழ்பணிந்து மன்றாடுவோம் (2) நாடிவரும் கோடி மக்கள் துயர் தீர்ப்பவன் நாயகனாம் இயேசுவையே கரம் ஏற்றவன் இறைவாக்கு வாழ்வுதனை தனதாக்கியே இரவாத புகழோடு தினம் வாழ்பவன் - 2 இறையருள் தேடுவோரின் குறைபோக்கவே திருவருள் புரிந்திடவே மன்றாடுவார் பாவிகளின் நேசரான இவரண்டையில் பணிவோடு தினம் தோறும் வந்திடுவாரே - 2 |