புனித அந்தோனியார் | 1153-புதுமை வள்ளலே |
புதுமை வள்ளலே புனித அந்தோனியாரே - உம் புகழ் பாடும் பக்தர் குரல் கேட்டிடுவாயே எந்தன் குறைகள் எல்லாம் போக்கிடுவாயே (2) ஐயா உன் ஆலயம் - அருள் வேண்டி வந்தோம் அருள் வீசும் திருமுகத்தைக் கண் குளிரக் கண்டோம் (2) பாரும் எங்கள் நெஞ்சமே உம்மிடமே தஞ்சமே (2) தேடும் உள்ள அமைதிதனைத் தந்திடுவாய் ஐயனே (2) மெய் வாசல் விளக்கேற்றி - கரம் கூப்பி நின்றோம் பொய்யாகும் தீச்செயல்கள் சந்நிதியில் கண்டோம் (2) எரியும் மெழுகுதிரியிலே வெள்ளி நேர்ச்சைப் பொருளிலே (2) எம் இதய எண்ணங்களைக் காணிக்கையாய்த் தந்தோம் (2) |