புனித அந்தோனியார் | 1151-பாதுகாவலாய் உதித்த நீர் |
பாதுகாவலாய் உதித்த நீர் பாவிகள் எமக்காய் வேண்டுவீர் அண்டி வந்தோம் எமை ஆதரி அற்புத அந்தோனி மாமுனி (2) மக்களைக் காத்திடும் உத்தமரே மங்கா மகிமையில் வாழ்பவரே (2) உம் மக்கள் எங்களைக் காத்திடுவீர் உத்தமராய் எம்மை மாற்றிடுவீர் அஞ்ஞான வழியில் இருள் நீக்கும் மெஞ்ஞான வழியின் சுவாலை நீ (2) ஞானத்தின் வழியில் நடந்திட ஈனர்க்கு இன்று அருள் புரிவீர் |