புனித அந்தோனியார் | 1180-பாதுவா நகரிலே |
பாதுவா நகரிலே உதித்தீர் முனிவரே பாமாலை சூடினோம் கனிவாய் ஏற்பீரே புதுமை பலவும் புரிந்து மக்கள் குறை தீர்ப்பீரே புகழ்ந்து பாடுவோம் உம் புதுமை சேர்ந்து பாடுவோம் நாங்கள் நம்பி நாடிவந்தோம் துன்பம் விலகவே நலம் புரிவீரே துயர் துடைப்பீரே கற்பில் சிறந்த கருணை நிறைந்த அன்பின் சீலரே கனிவாய் ஏற்பீர் எமது நேச மன்றாட்டுதனையே தேடி வந்தோம் அற்புதரே நாங்கள் உம்மையே தேற்றி எம்மையே காத்திடுவீரே திருமகனை கரத்தில் ஏற்கும் பெரும் வரம் பெற்றீர் திருத்தணியின் மீதினிலே திருவுளம் கொண்டீர் தினமும் கருணை வேண்டுகின்றோம் சின்ன இதயத்தில் திவ்விய பாலனை வேண்டி அருள்தாரீர் |