தூய அந்தோனியார் | 1149-பதுவையின் புனிதனைப் |
பதுவையின் புனிதனைப் புகழ்ந்திடவே பதி நாடிச் செல்லுவோம் மாந்தர்களே (2) வினை எல்லாம் போக்குவார் விரைந்திடுவீர் - 2 விண்ணவன் கரத்திலே பயமெதற்கு ஆனி பதின்மூன்றை நினைக்கையிலே அந்தோனியார் எங்கள் இதயத்திலே (2) ஆசிகள் பொழிந்திடும் நேரமிது - 2 ஆவலாய் அவர் பதம் நாடிடுவோம் ஆ... ஆ... ஆ... மகிழ்வுடன் பக்தர் கூடி நிற்க மனமுருகி அவர் குறை தீர்க்க (2) மன்னவன் யேசுவைக் கரமேந்தி - 2 மாட்சிமையாய் வரும் அற்புதனே ஆ... ஆ... ஆ... வேண்டிடும் அடியவர் தேவைகளை வேந்தனாம் யேசுவுக் கெடுத்துரைத்து (2) வேதனை இன்றிக் காப்பவனே - 2 வேத விற்பன்னா நவநீதா ஆ... ஆ... ஆ... கவிஞர்கள் கற்பனை சிறந்தோங்கக் கலைஞர்கள் வாத்திய இசை முழங்கக் - 2 கலை நிறை சிற்பத் தேரேறிக் - 2 கவினுறு வீதி வருவோனே ஆ.....ஆ......ஆ...... (பதுவை....) |