புனித அந்தோனியார் | 1148-பதுவைப் புனிதரின் |
பதுவைப் புனிதரின் புகழ் நாமம் பாடி ஆனநதம் கொண்டாடுவோம் புனிதரின் ஆலயம் பாரெல்லாம் புகழ் சாற்ற அவரின் வாழ்வாகுவோம் -(2) புனிதரே வாழ்க... புவியெல்லாம் வாழ்க... நாளுமே வாழ்க... நானிலம் வாழ்க.... (2) போதனை செய்து சாதனை புரிந்த உனக்கொரு கோவில் எழுப்பி நின்றோம் விண்ணும் மண்ணுமே புகழ்ந்து பாடுதே - ஈடு இணை இல்லா உம் பெயர் நிணைத்தே -(2) கோடியற்புதரே நாடி வந்தோமே எம் குறை தீர்ப்பாய் எம்மை வாழவைத்திடுவாய் (2) பதுவைப் பதியரே எம்மைக் காக்கும் முனிவரே எம்மூரை உம் தாள் பதம் வைக்கின்றோம் இரவோ பகலோ வெய்யிலோ குளிரோ - என் நாளும் உம் கரம் எம்மை நடத்தும் கோடியற்புதரே நாடி வந்தோமே எம் குறை தீர்ப்பாய் எம்மை வாழவைத்திடுவாய் (2) |