Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

புனிதர் பாடல்கள்

தூய அந்தோனியார் 1146-தேனினும் இனிய தாதையரே  
தேனினும் இனிய தாதையரே - நின்
தாளினைப் பணிந்தோம் தயை புரிவீர் (2)

கற்பினில் லீலி மலரோனே
கருணையில் மாரி மழைபோலே (2)
அற்புதராம் அந்தோனியாரே - 2
அடியவர் வேண்டும் வரம் தருவீர்

நல்லவராக வாழ்வதற்கே
நல்லறம் காத்து உயர்வதற்கே (2)
வருத்திடும் துயரம் மறைவதற்கே - 2
வரமருள் கோடி வரத்தோனே
 

மரியன்னையே எங்கள் மாமரியே
மாபரன் இயேசுவின் தாய்மரியே!