புனித அந்தோனியார் | 1145-தூய அந்தோனியே |
தூய அந்தோனியே உனை நாளும் நேயர் துணையும் நீயே உனைப்பாடும் வாழ்வின் வழியும் நீயே - 2 வங்க கடலோரம் வல்லோனை கரம் ஏந்தி பண்பு பாசம் இல்லா பாவியர் வினை தீர்ப்பாய் - 2 அன்பு அகல் ஏந்தும் இறை ஜோதியே தூய அந்தோனியே உந்தன் பாதம் நாடும் உள்ளங்கள் மலரச் செய்வாய் - 2 எந்தன் உளம் தேடும் மறை ஜோதியே தூய அந்தோனியே உந்தன் வார்த்தையினால் இறைவழி காட்டிடுவாய் தேவன் அருளைத் தந்து எம்மை நீ மலரச் செய்வாய் தூய அந்தோனியே |