Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

புனிதர் பாடல்கள்

தூய அந்தோனியார் 1144-கோடி மக்கள் கூடும்  
கோடி மக்கள் கூடும் கோடியற்புதரில்லம்
நாடி வந்தோர்க்கு நலம் நல்குவார்
கூடும் அடியார்க்குத் துணை தருவார்


தேரேறி அப்பன் நீர் தூய பவனி வரும்
நாளதைக் காண்பவர்கள் பேறான பேறுபெற்றோர் (2)
தீராத பிணிதீர்க்கும் திவ்விய பாலனிடம் - 2
மீளாத பாவியர்க்காய் வேண்டுமையா

ஆனி பதின்மூன்றில் ஆன்ம சாந்தி பெற்றீர்
ஞானியே நாவழியா மாவரம் பெற்று விட்டீர் (2)
தேடி வரும் அடியார் தேவைகள் இன்னதென்று - 2
நாடி நலம் புரியும் கோடியற்புதர் நீரே





 

மரியன்னையே எங்கள் மாமரியே
மாபரன் இயேசுவின் தாய்மரியே!