தூய அந்தோனியார் | 1143-கருணை முகத்தைக் காண |
கருணை முகத்தைக் காணக் கோடி கண்கள் வேண்டுமே - உம் கமல பதத்தைத் தழுவக் கூட்டம் அலையாய் வருகுதே ஆசி கூருமே - 2 குழந்தை இயேசு மழலை கேட்ட குமரன் நீரல்லோ குழைந்து பேசி இறைவன் ஆசி நிறையத் தாருமே இரந்து கேட்கும் வரங்களெல்லாம் கொடுக்க வேண்டுமே (2) இறைவன் உம்மில் இருக்கும் போது தயக்கம் வேண்டுமோ எமது உள்ளக் கவலை எல்லாம் உமது பதம் தந்தோம் ஏற்று இதற்கு மாற்று விடையை கேட்டு நாம் வந்தோம் மனது திறந்து உமது கருணைக் கடைக்கண் பாரையா (2) பதுவைப் புனிதர் எமது சந்தந்;தோனி நீரையா |