புனித சூசையப்பர் | 1142-ஐந்து திருக்காய அன்பில் |
ஐந்து திருக்காய அன்பில் அகல் விளக்கான ஜோதி அவலையுறும் எங்கள் மேல் கருணை கொள் ஞான ஜோதி ஆறுதல் பொழி குமரா அந்தோனி எனும் அழகா ஏறுபோல் எழுந்து தேரில் ஊர்வலம் வரும் தலைவா ஏழெட்டு நாட்களாக ஏதுமுண்ணாக் கழுதை தாழிட்டு தேவபாதம் துதித்திடச் செய்தீரையா நவன் திருநாமம் வாழ்க நாட்டின் நலன்கள் வாழ்க பயன் தருங் கல்வி செல்வம் பதுவைப் புகழ் போல் வாழ்க வங்க கடலோரம் வல்லோனை கரம் ஏந்தி வந்து வரம் நல்கும் தூய முனிவரனே |