புனித அந்தோனியார் | 1141-எம்மைக் கண்ணோக்கிடுவீர் |
எம்மைக் கண்ணோக்கிடுவீர் அந்தோனி மாமுனியே என்றும் காத்திடுவீர் - எங்களை என்றும் காத்திடுவீர் (2) உம்மை அடைக்கலமாய் - எம்முள் தெரிந்துகொண்டோம் (2) உம்மிடம் எங்களை நேர்ந்து கொண்டோம் எம் துயர்கள் பிணிகள் நீக்கிடுவாய் (2) தாய்போல் அணைத்துக் காத்து - எம் துன்பங்கள் போக்கிடுமே (2) சேயர்களாக எமைத் தினமும் ஆதரவாய் தயவாய் நோக்கும் (2) |