Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

புனிதர் பாடல்கள்

புனித அந்தோனியார் 1139-எங்கள் இயேசு பாலனை  


எங்கள் இயேசு பாலனை
கைகளிலே தாங்கிய - தூய
நெஞ்சம் கொண்ட புனிதரே
தேடி வரும் பக்தருக்கு
கோடிப் புதுமை செய்திடும்
புனிதரே உம் நாமம் வாழ்க (2)

கடலில் மீன்கள் இறைவார்த்தையைக்
கேட்பதற்கு புதுமை புரிந்தீர் (2)
சிலுவையினை அன்பு செய்த மாமுனியே - 2
இயேசுவுக்காய் வாழ்ந்திட ஆசை கொண்டு - 2
நற்செய்தி வழியிலே துறவியானீர்
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் - 2

பேய்களும் நடுங்கிப் போகுமே - ஐயா
உன் திருநாமம் சொல்லும் போதிலே (2)
ஊமைகளைப் பேசச் செய்யும் புதுமைப் புனிதரே - 2
அடிமைகளை மீட்டிடும் நல்ல மீட்பரே - 2
சோர்ந்து போன மனிதருக்கு ஆறுதல் நீரே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் - 2


 

மரியன்னையே எங்கள் மாமரியே
மாபரன் இயேசுவின் தாய்மரியே!