புனித அந்தோனியார் | 1138-உம்மைத் தேடி வருகின்றேன் |
உம்மைத் தேடி வருகின்றேன் அந்தோனி மாமுனியே உம்மையே பாடி புகழுகின்றேன் என் துணை நீர் தானே (2) புவியினில் புதுமைகள் புரிந்ததினால் புதுமையின் புனிதராய்ப் புகழடைந்தீர் (2) அனைவரும் கைவிட்டுப் பிரிந்தாலும் ஆதரவாய் என்னைத் தாங்கிடுவீர் (2) ஆதாரம் நீயே அன்பினில் எனையே தோள்களில் தாங்கிக் கொள்வாய் (2) கருணையின் தீபமும் நீரல்லவா தினம் எமைக் காப்பதுன் கரமல்லவா (2) துயரங்களாலே சோர்ந்த எங்கள் சுமைகளை சுகமாய் மாற்றுமையா (2) மழைபோல் இடர்கள் சூழ்ந்து கொண்டாலும் பனிபோல் மறையச் செய்வாய் (2) |