Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

புனிதர் பாடல்கள்

புனித அந்தோனியார் 1137-இறைவனின் புனிதரே வாழ்க  
இறைவனின் புனிதரே வாழ்க - இன்று
இறைஞ்சி உம் திருத்தலம் வந்தோம்
அன்பர் அந்தோனியார் உம் அருளாலே - யாம்
அற்புத வரம் பல அடைந்தோமே
நன்மையின் நாயகனே - கோடி
நன்றிகள் சாற்றுகின்றோம் (2)

வாழ்வினில் துன்பங்கள் வருகையிலே
வந்தோம் உம் திருவடியே
உம் முகம் நோக்கிப் பார்க்கையிலே
உவந்து எம் துயர்களைத் துடைப்பீரையா
சமயம் பலவும் கடந்து - உம்மைச்
சந்திக்கும் பக்தர்கள் மனதில் (2)
கவலை நீங்கிட கலக்கம் அகன்றிடக்
கருணை மழையை நீர் பொழியுமையா (2)

அலகையின் ஆதிக்கம் உயர்கையிலே
அண்ணலே ஒடுக்குகின்றீர்
நோய்களும் பிணிகளும் வாட்டுகையில்
நலம் தரும் புதுமைகள் புரியுமையா
குழந்தை இயேசுவைக் கரத்தில் - ஏந்திக்
கொஞ்சிடும் பேறு நீர் அடைந்தீர் (2)
வாழ்க புனிதரே வந்தோம் பாதமே
வளங்கள் தந்து வழி நடத்துமையா (2)
 

மரியன்னையே எங்கள் மாமரியே
மாபரன் இயேசுவின் தாய்மரியே!