புனித அந்தோனியார் | 1135-அருள் ஒளி வீசிடும் |
அருள் ஒளி வீசிடும் திருவிளக்கே அந்தோனி மாமுனியே (2) இருள் தனைப் போக்கிடும் பேரொளியே உம் வழியில் எந்நாளுமே வாழ்ந்திட வரம் அருள்வாய் (2) வரங்கள் கோடி பொழிந்தவரே வாஞ்சையின் மக்கள் உன் பதம் வந்தோமே (2) கருணை உருவாம் கடவுளின் மகனை இறைஞ்சியே எமக்கருள்வாய் கடவுளின் வார்த்தை மொழிந்தவரே நன் நாக்கு அழியா நற்தவ முனிந்திரரே - 2 வாழ்வின் வழியாம் வார்த்தை தனிலே வாழ்ந்திட வரம் அருள்வாய் |