Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

புனிதர் பாடல்கள்

புனித அந்தோனியார் 1133-அற்புதம் காணவிழைவோரே  
அற்புதம் காணவிழைவோரே - நம்
அந்தோனியாரிடம் வருவீரே - 2 (2)

வறுமையும் விபத்தும் வருத்திடும் பசியும்;
வாட்டிடும் பிணி பலவும் (2)
பறந்திடக் கண்ட பக்தர்கள் கோடி
பதறுகிறார் சாட்சி - 2

பதுவைப் பதியர் அந்தோனியாரின்
புதுமைப் புகழ் விளங்க (2)
மூவொரு இறைவனின் மகிமையும் பரவ
முடிவில்லா துதி முழங்க - 2

 

மரியன்னையே எங்கள் மாமரியே
மாபரன் இயேசுவின் தாய்மரியே!