புனித அந்தோனியார் | 1133-அந்தோனியார் புகழ் பாடுங்களேன் |
அந்தோனியார் புகழ் பாடுங்களேன் அன்போடு யாவரும் கூடுங்களே (2) கைகூப்பி தொழுவோம் நன்மைகள் பெறுவோம் துன்பங்கள் யாவும் தீர்ந்திடுமே (2) பாடும் பறவைக் கூட்டம் எல்லாம் பரனைப் புகழ்ந்திடவே ஆடும் மலைகள் ஓசை எல்லாம் அருளை ஒலித்திடவே நாடும் நகர மாந்தர் எல்லாம் நலனைப் பெற்றிடவே (2) நலனைப் பெற்றிடவே வீசும் புயலும் அமைதியாகும் விந்தைப் புனிதரிலே தூசும் துயரும் தீர்ந்து போகும் தூயவன் பார்வையிலே நேச இதயம் வாசம் செய்யும் நேயத் தலமிதுவே (2) நேயத் தலமிதுவே |