தூய அந்தோனியார் | -கர்த்தரைக் கரத்தில் ஏந்த |
கர்த்தரைக் கரத்தில் ஏந்தி அற்புதம் பல செய்திட உற்பவித்த உத்தமரே அந்தோணியா...ர் உற்பவித்த உத்தமரே அந்தோணியா...ர் மண்ணில் அற்ப சுகம் பாவம் போக்கி அர்த்தமற்ற வாழ்வை மாற்றும் நற்றவரே நல்லவரே அந்தோணியா.....ர் நற்றவரே நல்லவரே அந்தோணியா..ர் கோவேறு கழுதை கூட கூடி நின்ற கூட்டம் காண குனிந்து வணங்கச் செய்த அந்தோணியா...ர் குனிந்து வணங்கச் செய்த அந்தோணியா...ர் சேட்டை செய்யும் சாத்தானுக்கும் சாட்டை அடி தந்து அதன் கோட்டைகளைத் தகர்த்திட்ட அந்தோணியா...ர் அந்தோணியா....ர் அந்தோணியா....ர் காணாமல் போன பொருளை காணும்படி செய்து - அதை கண்டெடுக்கச் செய்ய வல்ல அந்தோணியா...ர் புண்ணியம் பல புரிந்து மண்ணில் என்றும் நிலைத்திட்ட மண்ணில் நிறை விண்ணவரே அந்தோணியா....ர் அந்தோணியா...ர் அந்தோணியா...ர் கற்பின் நல் இலக்கணமாய் கண்காணும் நல்சொற்பனமாய் அர்ப்பணத் திருவிளக்கே அந்தோனியார் தூய்மையில் நல்லீலியுமாய் துன்பங்களின் வேலியுமாய் துலங்கி துதிக்கப்படும் அந்தோனியார் அந்தோனியார் அந்தோனியார் |