புனித அன்னம்மாள் | தலைமுறை வாழ்த்தும் |
தலைமுறை வாழ்த்தும் தாயவள் நீயே தவமிருந்தோம் உன் தயவருள்வாயே அன்னையை ஈன்ற நல் அன்னையே - இறை அன்னம்மாள் எம் அருட்துணையே தூய கரைந்துருகும் உன் விழி துடைப்பார் கடவுள் என்றே நம்பி காத்திருந்தாய் உருவிலான் உருபெறும் அருள் நிறைந்தவளை உன் கருவினில் கறையின்றி நீ சுமந்தாய் - எம்மை குறையின்றி இறைவழி சேருமம்மா தாயே வாழ்க எம் தயவே வாழ்க அன்னை வாழ்க அன்னம்மாள் வாழ்க குடும்பங்கள் தழைத்திட வரமருள்வாய் குழந்தைகள் திழைத்திட உறவருள்வாய் பெற்றவர் பெரியவர் மாண்பினைப் போற்றி நல் ஒற்றுமை உணர்வுகள் தாருமம்மா எமை உற்றவர் இயேசுவிடம் சேருமம்மா தாயே வாழ்க எம் தயவே வாழ்க அன்னை வாழ்க அன்னம்மாள் வாழ்க |