Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

புனிதர் பாடல்கள்

புனித அன்னம்மாள் அன்னம்மாள் அன்னையே  
அன்னம்மாள் அன்னையே எங்கள் காவலாய்
உன்னையே அண்டினோம் இன்னமும்
இன்னல் தீர்த்திடத் தாமதமேன் தாயே
அண்ணல் இயேசுவின் பாட்டியன்றோ

அமிர்தம் பொழிந்த விருட்சமே
அனைவோருக்கும் குளிர் நிழலாய்
இனிய மகளார் மரியை - உல
கினுக் கீந்திடும் தாய் அல்லவோ

உமது மகிமையை அறிந்தோம் அம்மா - அதனால்
உந்தன் சரணடைந்தோம் - பவ
மிடிமை அகலும் என்றுணர்ந்தோம் - உன்
கடைக்கண் அருள் பாலிப்பாயே
           பவ மாய்கையில் நாம் அழிந்தே - இயேசு
           பரனாசினை இழந்தே - வீண்
          விழல் சீவியத்தால் அலைந்தே - பேய்
          வலையில் முழுகாது காப்பாயே

மனதில் ஆனந்தம் நிறைந்து - கருணை
மழையாய் பொழியுமென்றுணர்ந்து - உம்
தயவில் வாழ்வோமென்றறிந்து - உன்
சரணே கதியெனறுணர்ந்தோம்
          உலகாயுதக் கொள்ஐகையிலே - லோகம்
          உழன்று நன்னெறி பிறழாது - பொது
          உடமை நெருப்பில் எரிந்து - பேர்
         அழிவையடையா காப்பாயே

 

மரியன்னையே எங்கள் மாமரியே
மாபரன் இயேசுவின் தாய்மரியே!