Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

புனிதர் பாடல்கள்

புனித அன்னம்மாள் அம்மையே மனமிரங்காய்  

அம்மையே மனமிரங்காய் உன்னயே சரணடைந்தோம்
அன்னம்மாளே - என் தாய் நீரல்லோ
உன்னை சரணடைந்தோம் ஆட்கொள்வாய்
உன் அருளால் யாம் உய்யவே காப்பாயே

விண்ணவரின் இராக்கினியை மண்ணுலகினுக்கீந்தாயே
என்னரும் வரம் இதை ஈந்த நீர் எமக்காய் மன்றாடுவீர்
அம்மையே மனமிரங்காய் உன்னை சரணடைந்தோம்
அன்னம்மாளே - என் தாய் நீரல்லோ
உன்னை சரணடைந்தோம் ஆட்கொள்வாய்
உன் அருளால் யாம் உய்யவே காப்பாயே

புண்ணிய பழம் கனிந்த நீர் விண்ணக திரு தாயானீர்
பன்னிருமுடி உனை ஈந்தாயே எமக்காய் மன்றாடுவீர்
அம்மையே மனமிரங்காய் உன்னை சரணடைந்தோம்
அன்னம்மாளே - என் தாய் நீரல்லோ
உன்னை சரணடைந்தோம் ஆட்கொள்வாய்
உன் அருளால் யாம் உய்யவே காப்பாயே


 

மரியன்னையே எங்கள் மாமரியே
மாபரன் இயேசுவின் தாய்மரியே!