புனித அன்னம்மாள் | அம்மா அன்னம்மாள் |
மக ம மகரிச ரீரீ க நிஸ ரித நீ நீ நீ ரீ ரீ நிஸ நிதப நீ நீ நீ ரீ ரீ ஸப அம்மா அன்னம்மாள் நீதானம்மா அம்மா என்னம்மா நீதானம்மா (2) அன்னை மரியாளின் தாய் நீயம்மா அன்னை அகிலத்தின் தாய் நீயம்மா (2) கருணைப் பேரொளியே காத்திடும் காவலியே புதுமைகள் புரியும் புண்ணியத் தாயே உன் புகழ் பாடியே வாழ்த்திடுவோமே தவமாய்த் தவமிருந்து தரித்தோம் திருமகளை தரணிக்குத் தாயாக தாரை வார்ப்போமே தஞ்சமென்று உம்மை நம்பி வந்தோர்க்கு தாயினும் தாயாக தயவுடன் காப்பவளே உன் புகழ் பாடியே வாழ்த்திடுவோமே உன் துணையாலே வாழ்ந்திடுவோமே நிஸநிகபா ஸரிகமநீ ராகமாக ஸகமம அருள் நிறைமரியைஅமலஉற்பவியை அருளுடன் ஈன்றளித்து அவனியை காப்பவளே அல்லல்படும் மாந்தரின் துயரினைத் துடைத்து அடைக்கலம் கொண்டு காப்பவள் நீயே உன் புகழ் பாடியே வாழ்த்திடுவோமே உன் துணையாலே வாழ்ந்திடுவோமே |