தூய அலோசியஸ் | எங்கள் அன்பின் தூயவரே |
எங்கள் அன்பின் தூயவரே காயுன் நாட்டின் இளவரசே மாந்துவா நகரில் பிறந்தவரே இளம் உள்ளங்களை கொள்ளை கொண்டவரே எங்கள் புனிதரே அலோசியஸ் கொண்சகாவே உம்மை வாழ்த்திப் பாடவந்தோம் நன்றி பாமாலை சூட வந்தோம் யேசு சபையிலே நீரும் சேர்ந்தீர் ஏசுவையே நீர் பற்றிக் கொண்டீர் தூக்கிச் சென்றீர் உயிரை அவருக்காய் தியாகம் செய்தீர் தந்தையே உம்மை வாழ்த்துகின்றோம் எங்கள் புனிதரே உம்மைப் போற்றுகின்றோம் மரியன்னை மீது பக்திகொண்டீரே உரிமையாய் என்றும் வாழ்ந்தீரே அரசபதவியை தியாகம் செய்து எளிமை வாழ்வை ஏற்றீரே தந்தையே உம்மை வாழ்த்துகின்றோம் எங்கள் புனிதரே உம்மைப் போற்றுகின்றோம் |