தூய அலோசியஸ் | எங்கள் அன்பின் தூயவரே |
எங்கள் அன்பின் தூயவரே இளையோர் வாழ்வின் காவலரே கண்ணின் மணிபோல் காப்பவரே மண்ணின் மைந்தர் வேண்டுகின்றோம் அண்ணலே அலோசியஸே எங்கள் மீட்பின் சுடரே வாழ்வின் வலிகள் கண்ணீர்த் துளிகள் துடைக்கும் இறைக் கரமே துளிர்க்கும் அருள் வரமே எம் வாழ்வில் இளமை இடறல் சோகம் நல்வாழ்வின் நெறியில் வழுவும் காலம் போதை ஏறி பயணம் மாறும் பாதை மாறி சலனம் வீழ்த்தும் அன்னை மரியின் முன்னே நின்று கற்பின் உறுதி நீ ஏற்றாய் உண்மை வாழ்வால் தூய்மை அன்பால் அறநெறி அறிவால் அதைக் காத்தாய் இளமையின் காவலர் நீதான் எங்கள் இலட்சியத் துணையும் நீதான் வழி காட்டுமே வாழ்வாகுமே வளமை சேர உடன் வாருமே எம் வாழ்வில் வறுமை வீழ்ச்சி அல்ல தீராத நோய்கள் சாபம் அல்ல வீழ்ந்தபோது தான் நம்பிக்கை நீயே விழுதுபோல தாங்குவாயே செல்வம் துறந்து தன்னலம் மறந்து பிறர் நல வாழ்வை நீ தேர்ந்தாய் தாய்மை அன்பால் நோய்கள் தீர்த்து சேயெம் வாழ்வை நிதம் காப்பாய் வீழ்வோர் நம்பிக்கை ஒளியே மீண்டும் எழுந்திடத் தூண்டும் நல் அறிவே வழி காட்டுமே வாழ்வாகுமே வளமை சேர உடன் வாருமே |