Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

புனிதர் பாடல்கள்

அனைத்துப் புனிதர்கள் புனிதர்களின் புகழ்  

புனிதர்களின் புகழ் பாடுவோமே
மண்ணில் மாந்தர்களின் விழி திறந்தாகவே
செபவாழ்வு நிறைவாழ்வின் பணியானதே
புனிதத்தில் பேரின்பம் கண்டாகவே
மனிதத்தில் மாண்பினை வாழ்ந்தாகவே

இறையாட்சி நெறிவாழ இணைந்தாகி வாழ்ந்திடுவோம்
நற்செய்தி அறிவிக்க கடும் வாழ்வு வாழ்ந்திடுவோம்
வாழ்த்துங்கள் பெயர் கொண்டோர் புகழ் கீதம் பாடுங்கள்
ஆ.......ஆ........ஆ........ஆ......
வாழ்த்துங்கள் பெயர் கொண்டோர் புகழ் கீதம் பாடுங்கள்
விண்ணக மாட்சி இறைவனுக்காட்சி நிறைவோடு வாழ்ந்தவரே
உடல் பொருள் ஆவியைத் துறந்தனரே
புனிதத்தின் பாதையில் வாழ்ந்திடவே


அன்பிற்காய் பணிவாழ்வை துணிவோடு தந்தனரே
மகிழ்வோடு இரத்தம் சிந்தி மறைசாட்சி ஆனவரே
பாடுங்கள் பெயர் கொண்டோர் புகழ் கீதம் வாழ்த்துங்கள்
ஆ.......ஆ........ஆ........ஆ......
பாடுங்கள் பெயர் கொண்டோர் புகழ் கீதம் வாழ்த்துங்கள்
சோதனை வேதனை பயமே இன்றி எதிர்கொண்டு வாழுங்கள்
உலகமும் இன்பமும் பயனற்றதே
ஆவியும் ஆன்மாவும் நிறைவாகவே





 

மரியன்னையே எங்கள் மாமரியே
மாபரன் இயேசுவின் தாய்மரியே!