Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

புனிதர் பாடல்கள்

அனைத்துப் புனிதர்கள் அழகாய் நிற்கும் யார் இவர்கள்  
அழகாய் நிற்கும் யார் இவர்கள்
திரளாய் நிற்கும் யார் இவர்கள்
சேனைத் தலைவராம் இயேசுவின் பொற் தளத்தில்
அழகாய் நிற்கும் யாரிவர்கள்

எல்லா ஜாதியார் எல்லா கோத்திரம்
எல்லா மொழியும் பேசும் மக்களாம்
சிலுவையின் கீழ் இயேசு இரத்தத்தால்
சீர் போராட்டம் செய்து முடித்தோர்

இனி இவர்கள் பசியடையார்
இனி இவர்கள் தாகமடையார்
வெய்யிலாகிலும் தணலாகிலும்
வேதனையை அளிப்பதில்லை

ஆட்டுக்குட்டி தான் இவர் கண்ணீரை
அற அகற்றித் துடைத்திடுவார்
அழைத்துச் செல்வார் இன்ப ஊற்றுக்கே
அள்ளிப் பருக இயேசு தாமே

வெள்ளை அங்கியைத் தரித்துக் கொண்டு
வெள்ளைக் குருத்தாம் ஓலை பிடித்து
ஆர்ப்பரிப்பார் சிங்காசனம் முன்பு
ஆட்டுக்குட்டிக்கே மகிமையென்று

ஒரு தாலந்தோ இரண்டு தாலந்தோ
ஐந்து தாலந்தோ உபயோகித்தோர்
சிறிதானதோ பெரிதானதோ
பெற்ற பணி செய்து முடித்தோர்

ஆதிப்பிதாவே, ஆட்டுக்குட்டியே
தூய ஆவியே துதி ஸ்தோத்திரம்
கன மகிமை பெலன் வல்லமை
என்றென்றைக்கும் உம்முடையதே









 

மரியன்னையே எங்கள் மாமரியே
மாபரன் இயேசுவின் தாய்மரியே!