Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

புனிதர் பாடல்கள்

புனித சூசையப்பர் திருக்குடும்பத்தின் தலைவராம்  
திருக்குடும்பத்தின் தலைவராம்
புனித சூசை தந்தையாம்
தூய அன்னையின் கணவராம்
குழந்தை இயேசுவின் வளர்ப்புத் தந்தையாம்
தலைவராம் தலைவராம் குடும்பத்தின் தலைவராம்
திருக்குடும்பத்தின் தலைவராம்

உழைத்து உழைத்து வாழ்ந்த புனிதரே
உழைக்கும் கரங்கள் என்றும் தாருமே
உன்னதரிடம் பரிந்து பேசுமே
எங்கள் வேலையில் உயர்வைத் தாருமே
உழைப்பின் தந்தையே புனித சூசை தந்தையே
எங்கள் ஜெபத்தைக் கேளுமே

வாழ்வை முழுதும் தந்த புனிதரே
எங்கள் வாழ்வை புனிதமாய் மாற்றுமே
பிரிந்த குடும்பம் ஒன்றாய்ச் சேரவே
உம் அருளை என்றுமே தாருமே
வாழ்வின் தந்தையே புனித சூசை தந்தையே
எங்கள் ஜெபத்தைக் கேளுமே







 

மரியன்னையே எங்கள் மாமரியே
மாபரன் இயேசுவின் தாய்மரியே!