Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

புனிதர் பாடல்கள்

புனித சூசையப்பர் வான்போற்றும் மலரே  

வான்போற்றும் மலரே சூசை முனியே
என் தெய்வத் தந்தையே என்றும்
உன் அன்பு நிலையினில் ஓயாத உழைப்பினில்
உன் பாதம் நான் தொடர்வேன்
உந்தன் வாய்மை வழியினிலே என்றும் தூய்மை லீலியே
அன்பின் சிறகினில் மகிழ்ந்து நான் வாழுவேன்

அறநெறி வாழ்வினில் அனைவருமே
அருளினில் அகிலமும் சிறந்திடவே
உழைப்பதன் மேன்மையை உணர்ந்திடவே
உண்மையின் நெறியினில் உயர்ந்திடவே
இறை இயேசுவை கையில் ஏந்திய
புனிதருள் முதல்வனே மாமுனியே

இல்லறம் நல்லறம் என விளங்க
இடர்பல ஏற்றிட துணிந்தவரே
திருமறை என்ற சுடராய் ஒளிர்ந்தவரே
இறைவனின் திருவுளம் அறிந்தவரே
இறை இயேசுவை கையில் ஏந்திய
புனிதருள் முதல்வனே மாமுனியே


 

மரியன்னையே எங்கள் மாமரியே
மாபரன் இயேசுவின் தாய்மரியே!