புனித சூசையப்பர் | உறங்க்கும் நிலையில் |
உறங்க்கும் நிலையில் இறைத் திருவுளம் உணரும் தூய யோசேப்புவே அமைதியும் வீரமும் நிறைவுக் கண்டிடும் புனிதத் திருப்பாதமே-முழு விசுவாசத்துடனே உம் கோவில் வந்தோம்-எம் மனதின் வேண்டுதல்கள் உரைத்தோம் -உம் மைந்தர் இயேசுவிடம் பரிந்து பேசுமைய்யா கிறிஸ்தவக் குடும்பங்களின் முழுமுதல் மாதிரியே உலகின் துன்பங்களை எளிதாய் வென்றவரே ஆண்டவர்க்குள் ஆழ்ந்து உறங்கி-அவர் இறைசித்தம் அறிந்தவரே -உம் தலைமாட்டில் வைக்கும் விண்ணப்பங்களெல்லாம் ஒன்றும் குறைவின்றி நிறைவேறுமே உறங்கிடும் வேளையிலும் இறைவனில் இணைந்தவரே கனவிலும் இறையுறவை நிறைவாய் சுவைத்தவரே தேவமரித் துணைவராக- இறை இயேசுவின் நல் தந்தையாக -உம் தெய்வீகம் பொழியும் திருவருள் கொண்டு செபிக்கும் இதயங்களை நிரப்பிடுமே |