புனித சூசையப்பர் | திருக்குடும்பத்தின் பாதுகாவலரே |
திருக்குடும்பத்தின் பாதுகாவலரே நீதிமான் சூசை மாமுனியே மனுக்குலத்தை அன்பு செய்த பிதாவே அன்பினால் நிறைந்த வளனாரே கடவுளின் திருச்சித்தம் ஏற்றுக்கொண்டு அன்னை மரியாளின் காவலானீர் தச்சன் உன் வீட்டில் இயேசு வளர்ந்தார் கனிவான உன் அன்பின் நிழலில் அர்ப்பண வாழ்வின் நறுமலரே கன்னியர் குலத்தின் காவலரே திருக்குடும்பத்தின் பாதுகாவலரே உன் பாத மலரில் வணங்குகின்றோம் |