Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

புனிதர் பாடல்கள்

புனித சூசையப்பர் தந்தையே சூசை தந்தையே  
தந்தையே சூசை தந்தையே
சிந்தையில் வாழும் தந்தையே
சந்தம் பாடி சந்தோசமாய் சிந்து பாடுவோம்
வந்தனைகள் செய்து நாளும் வாழ்த்திப் பாடுவோம்
சிந்தனையில் நிற்கும் எங்கள் தந்தை வாழ்கவே

அழுமனம் போக்கிட அருகிருந்தீர்
அருள்நிறை மரியென அணைத்துக்கொண்டீர்
நேர்மையாய்த் தொழிலினை நேசிக்கின்றீர்
நேசமாய் இயேசுவைக் காப்பவரே
திருக்குடும்பத்தின் நல்ல தலைவரும் நீர்
வரும்பகை அனைத்தையும் தூரம் தள்ளுவீர்
என்றும் எம்மை நாடுகின்ற தந்தை நீரன்றோ
நன்றி சொல்லிப் பாடுகின்றோம் எங்கள் தந்தையே

தாவீதின் குலத்தில் உதித்தவரே
தரணியில் ஒளியாய் விளங்கிடுவீர்
லீலி மலர் உனை அணி செய்கிறேன்
நல்ல காவலன் வலம் வந்தீரே
பொறுமையின் வடிவம் நீர் அல்லவோ
வறுமைகள் நீங்கிட துணை செய்வீரே
குடும்பங்கள் செழித்திட அருள் தாருமே
தடுமாறும் உலகிற்கு வழிகாட்டுமே



 

மரியன்னையே எங்கள் மாமரியே
மாபரன் இயேசுவின் தாய்மரியே!