புனித சூசையப்பர் | தந்தையாக இயேசுவை |
தந்தையாக இயேசுவை காத்தவரே என் குடும்பத்துடன் வாய்மையுடன் வாழ்ந்தவரே ஆபத்திலே காத்து வரும் யோசேப்பே எம்மையும் எம் குடும்பத்தையும் காத்தருளும் நல் வாய்மையானவரே பெரும் தூய்மையானவரே நல்ல பண்பு கொண்டவரே வளமையில் இயேசுவையே வளர்த்தவரே பொறுமைகள் கற்றுத் தந்து வாழ்ந்தவரே தந்தையென்ற இதயத்துடன் கன்னிமரி தாயுடனே கணவராய் வாழ்ந்த தூய வளனாரே இளமை துடிப்புடனே உழைத்தவரே இயேசுவை அரவணைத்து காத்தவரே தந்தையென்ற இதயத்துடன் இயேசுவை வழிநடத்தி தாழ்மையில் வாழ்ந்த தூய வளனாரே |